Monday, February 21, 2011

கவிதைகள்

குழந்தையின் மழலை
தாலாட்டில்
உறங்கியது தூளி!



மழை 

மழை விட்டும்விடாத ஒருமாலை வேளையில் தான்
உன்னை பார்த்தேன்;
குடைக்குள் பதுங்கும் மனிதர்களை பார்த்து
வேடிக்கை சிரிப்பு சிரித்துக்கொண்டே
நீ மழையில்நனைந்தாய்
உன் சிரிப்பெனும் மின்னல்
என் மனதில் புதிய மழையை
உருவாக்கி விட்டு சென்றது!
மழை விட்டும் நான் தனியே நனைந்தேன்!


காதல்
இனிமே வெளியே போனா காலை உடைப்பேன் - அப்பா
என்ன பாவம் செய்தேனோ
என் வயித்தில வந்து நீ பொறந்தே - அம்மா
நீ இப்ப‌டி பண்ணினா எனக்கு கல்யாணம் நடக்காதடி -‍ அக்கா
எல்லாருடைய ஆதங்கத்தையும் புறந்தள்ளுகிறது
உன்னுடைய காதல்!

காதல் - பார்ட் 2

கண்கள் திறந்திறப்பதை விட‌
மூடியிருக்கும் போதுதான்
அதிகம் தரிசிக்கிறேன் உன்னை!


பொருட்களை விட அதிகம் கனத்தது இதயம்

No comments:

Post a Comment