10 வருஷத்துக்கு முன்னாலே நடந்த சம்பவம். சென்னையில் வேலை செஞ்சுக்கிட்டு இருந்த சமயம். வேலை முடிஞ்சு நைட் பத்து மணிக்கு ஆயிரம் விளக்கு வழியா நடந்து வந்துட்டிருக்கும் போது நடை பாதையிலே ஒரு குழந்தை அழுகிற சதம் கேட்டு பார்த்த்தேன். ஒரு அம்மா நல்ல தூங்கிட்டிருக்க, ஒரு பெண் குழந்தை நல்லா அழுதுகிட்டு இருந்தது. எனக்கு ஒண்ணும் புரியாம நான் அங்கேயே நின்னேன். நான் நிக்கறதை பாத்துட்டு அந்த சைடா போறவன் வர்றவன் எல்லாம் என்னை ஒரு மாதிரி பாத்துட்டு போனாணுங்க. அங்கே நிக்கறது அங்கம்ஃபர்ட்டபிளா ஃபீல் பண்ணினேன். ஆனாலும் அந்த குழந்தையை விட்டுட்டு போக மனசில்ல. பக்கத்துலேயே ஒரு பிச்சைக்காரன் படுத்து இருந்தான். அவன எழுப்பி 100 ரூபா குடுத்து பக்கத்துலே இருந்தா ஒரு கடைலே பாலும் பிஸ்கட்டும் வாங்கிட்டு வர சொன்னேன். அதுக்குள்ளே அந்த பொம்பள ஒருவழியா எழுந்து உக்கார்ந்துது. போன பிச்சைக்காரன் பாலும் பிஸ்கட்டும் வாங்கிட்டு வந்தான். அவங்கிட்டே ஒரு 50 ரூபாயும், அந்த பொம்பள கிட்டே ஒரு 50 ரூபாயும் குடுத்துட்டு நான் போனேன்.
No comments:
Post a Comment