Sunday, May 6, 2012

மானாட மயிலாட ஜட்ஜஸ் நமிதா, கலா & குஷ்பு, உண்மையிலே ஜட்ஜஸாக இருந்தால்?


டிபென்ஸ் லாயர்: கனத்த கோர்ட்டார், சாரி,கனம் கோர்ட்டார் அவர்களே, ஜாக்கெட் மேடம் அவர்களே, அக்கா அவர்களே
ப்ராசிக்கியூஷன்: (தனக்குள்ளே), இவன் சொல்லி முடிக்கிறதுக்குள்ளே டைமே முடிஞ்சிடும்.
டிபென்ஸ்: இந்த கொலைக்கும், என் கட்சிக்காரருக்கும் எந்த சம்மந்தமுமில்லை. கொலை நடந்தப்பொ, அவரு அவர் மனைவி கூடத்தான் இருந்தார்.
ப்ராசிக்கியூஷன்: யோவ்,கொலையானதே, அவரு வொய்ப் தான்.
நமீதா: ப்ராசிக்கியூஷன் மச்சான், நீ ஏன் இப்படி பேசுது?, உங்க டர்ன் வரும்போது மட்டும் பேசு மச்சான்
ப்ராசிக்கியூஷன் : (தனக்குள்ளே), அப்படியே பேசிட்டாலும்.
டிபென்ஸ்: சாரி கோர்ட்டார் அவர்களே, கொஞ்சம், டங்க் ஸ்லிப் ஆயிடிச்சு,என் கட்சிக்காரர், கொலை செய்யவில்லை.
ப்ராசிக்கியூஷன்: மேடம், இது அவரோட கை ரேகை படிஞ்ச கத்தி, பக்கத்து வீட்ல ரெண்டு பேர் பார்த்திருக்காங்க
நமீதா: என்ன மச்சான் நீ இப்படி பண்ணுது, நெக்ஸ்ட் டைம், நல்லா ப்ராக்டீஸ் பண்ணி
நல்லா பண்ணனும் சரியா?
குற்றவாளி: சரிங்க மேடம்
ப்ராசிக்கியூஷன் : (என்ன கொடுமை டா இது?) மேடம், அப்படில்லாம், பண்ண முடியாது. குண்டு மேடம்,சாரி, குஷ்பு மேடம், நீங்க சொல்லுங்க‌
குஷ்பு: கிளி (கிழி) கிளின்னு கிளிச்சிட்டீங்க போங்க‌
ப்ராசிக்கியூஷன் : (ஆமாம், அவரு கிளி கிளின்னு கிளிச்சாரு, நீங்க, குரங்கு குரங்குன்னு உக்காந்துருக்கீங்க), மேடம், தீர்ப்பை சொல்லுங்க மேடம்
குஷ்பு:எட்டு மார்க் போடலாம், நெக்ஸ்ட் டைம், கரெக்டா பண்ணனும், சரியா
ப்ராசிக்கியூஷன் : அய்யோ மேடம், இது ஒண்ணும் டான்ஸ் ஷோ இல்ல, கலாக்கா, நீங்களாச்சும், ஒழுங்கா தீர்ப்பை சொல்லுங்க
கலா:(குற்றவாளியைப் பார்த்து), ஏண்டா இப்படி பண்ணினே, உன் மேல எவ்ளோ நம்பிக்கை வெச்சிருந்தேன், அந்த ராகவை பாரு, கால் உடைஞ்சாலும், எவ்ளோ அழகா, கொலை பண்ணிருக்கான். இந்த கோர்ட்ட நடத்த நான், எவ்ளோ கஷ்டப்படறேன் தெரியும்ல, இனிமே இப்படி பண்ணக்கூடாது, சரியா, ஒனக்கு இன்னொரு சான்ஸ் தரேன்
குற்றவாளி: (அழுது கொண்டே), சரிக்கா, ரொம்ப தேங்க்ஸ் கா
ப்ராசிக்கியூஷன்: அடேங்கொய்யால‌, இங்கே இருந்தா என‌க்கு பைத்திய‌ம் புடிச்சுடும் (ச‌ட்டையை கிழித்துக்கொண்டு ஓடுகிறார்)
நமீதா: நீ அடுத்த‌ டான்ஸ் சாரி, அடுத்த‌ கேஸை போடு ம‌ச்சான்

No comments:

Post a Comment