Saturday, February 25, 2012

இந்த மாதிரி பொம்மைகள் வீட்டில் இருந்தால் எப்படி இருக்கும்


சிதம்பரம் பொம்மைபொம்மைகளுக்கென்று ஒரு தேர்தல் வைத்தால் அதில் வெற்றி பெறாமலேயே தானே வெற்றி பெற்றதாக அறிவித்துக்கொள்ளும். அதுவும் எப்படி? 200 பேர் உள்ள வாக்கு தொகுதியில் 225 வாக்கு வித்தியாசத்தில் ஜெயித்ததாக. அந்தளவு கனெக்ஷன் உள்ள பொம்மை. பிடிக்காத வார்த்தைகள் - பாம், துப்பாக்கி, சிவப்பு தீவிரவாதம்...

மன்மோகன் சிங் பொம்மை - தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைக்கு மாற்றாக வந்தது. பெண்கள் புருஷனுக்கு பதில் இதை வைத்துகொள்ளலாம். சொன்ன பேச்சை கேட்கிறதோ இல்லையோ, நன்றாக தலையாட்டும் (முக்கியமாக - பெண்கள் பேச்சுக்கு, உங்கள் பேர் சோனியாவாக இருந்தால் இன்னும் நல்லது). வீட்டில் எத்தனை பொம்மைகள் இருந்தாலும், இதுதான் தலைவர், அதாவது தலைவர் மாதிரி, எந்த பொம்மையும் இவர் பேச்சை கேட்காது. டீச்சர், கேள்வி கேட்டா, பதில் சொல்லாம எப்படி, இருக்கனும்னு இந்த பொம்மைகிட்டே கத்துக்கலாம்

கருணாநிதி பொம்மை - குடும்பம் குட்டி என்று ஒரு நூறு பொம்மைகளுடன் சேர்த்துதான் இதை வாங்க முடியும்அதுவும் ஊர் ஊராக சென்று தான் வாங்க வேண்டும். குடும்பம் அப்படி. பேட்டரி போட்டால், தமிழ் தமிழ் என்று பேசும். ஆனால் தன் கூட வுள்ள பொம்மைகளை இங்கி லீஷில் தான் பேச வேண்டும் என்று கட்டாயபடுத்தும். கூட்டுக்குடும்பத்தின் நன்மைகளை உங்கள் குழந்தைகளுக்கு விளக்க இதை வாங்கலாம். ஆனால், இந்த பொம்மையுடன் விளையாடிய பிறகு, உங்க பையனோ, பெண்ணோ, ரெண்டு பொண்டாட்டி,மூணு புருஷன் வேணும்னு சொன்னால், என்னை கேக்காதீங்க.

திக்விஜய் சிங் பொம்மை - தலையில் அடிபட்ட மாதிரியே பேசும். உங்களை பற்றி உங்கள் பார்ட்டன்ரிடம் தப்பு தப்பாக பேசி பேசியே பிரச்சினையை உருவாக்கிவிடும்.  உங்கள் பிள்ளையை பைத்தியமாக்க விரும்பினால் நீங்கள் கட்டாயம் வாங்கி கொடுக்கவேண்டிய பொம்மை.