Saturday, July 14, 2012

என் நண்பனின் காதல்கள் (பாகம் 1)


நம்ம ஃப்ரெண்ட்ஸ் இருக்கானுங்களே, ரொம்ப நல்லவனுங்க (வடிவேலு பாணியிலே படிக்கவும்). சும்மா இருக்கறவனுங்களை சொறிஞ்சு உடறதே அவனுங்க வேலை. "டேய் அந்த பொண்ணு உன்னையே பாக்கிறாடானு ஆரம்பிப்பானுங்க. கொஞ்சம் கொஞ்சமா நம்மளும் ஏதாச்சும் பண்ணி அந்த பொண்ணும் நம்பளை பார்க்கும்போது, " டேய் அவ பஜாரிடா, அவள வேற ஒருத்தன் கூட பார்த்தேன்னு சொல்வானுங்க. நான் பார்த்த அந்த மாதிரி கதைங்களைத்தான் நான் இப்போ சொல்லப் போறேன். மக்களே, நல்லா கவனிங்க, நான் பார்த்த கதைங்கதான். என் கதை இல்லே.

ஃப்ரெண்ட் பேர் குமாருன்னு வெச்சுக்கலாம். குமார் ஏழாவது படிக்கறப்போ (ஆமாம், ஏழாவது) அவனுக்கு ஃபர்ஸ்ட் காதல் வந்துது. அவன் க்ளாஸ்லேயெ கொஞ்சம் வெள்ளையா இருந்த சுள்ளான் மேல அவனுக்கு ஒரு கண்ணு. என்னா ப்ராப்ளம்னா, பாய்ஸ் ஹரிணி மாதிரி, எல்லாப் பயலுவளுக்கும் அவ மேலேயெ கண்ணு. ஆனாலும், நம்ப குமாருக்கு நம்பிக்கை இருந்த்து. ஏன்னா, க்ளாஸ்லேயெ நல்லா படிக்கறது அவந்தான். அந்த பொண்ணுக்கும் இவன் மேலெ ஒரு கண்ணு. அதுக்கேத்தா மாதிரி, நம்ப ஃப்ரெண்ட்ஸுங்களும், இவனை ஏத்தி விட்டானுங்க. "டேய் அவ உன்னை பத்தித்தான் பேசறாளாம், என்னோட ஆளு சொன்னா", இது கட்டையன். அவன் பொண்ணுங்களை பாத்தாலே, வெலவெலத்து போய், நின்னுடுவான். பொண்ணுங்களும், அவன பாத்தா காத தூரம் ஓடுவாளுங்க. ஆனாலும், அவனுக்கு ஒரு ஆளு இருக்குன்றதையும், அவ, இவன் ஆளைப்பத்தி சொன்னாங்கறதையும் நம்பினான். நல்லத யாரு சொன்னாலும், நாம நம்பித்தானே ஆகணும். இதுலெ நீங்க ஒண்ணு கவனிக்கணும். நம்பகுமாரு, அந்த பொண்ணுக்கிட்டே இது வரைக்கும் பேசினதேயில்லெ. அதுவும் நடந்துச்சு. ஒரு சுபயோக சுபதினத்திலே, அந்த பொண்ணு, இவன் கிட்டே வந்து, டைம் என்னானு, கேட்டுச்சு. அந்த ஸ்கூல்லேயே, வாட்ச் கட்டின பல்லு புடுங்கி அவந்தான். அவன் டைமை சொல்ல, அது அப்படியே டெவலப் ஆகி கொஞ்சம் கொஞ்சமா வளர ஆரம்பிச்சது. ண்ணும் பெரிய பேச்சில்லை. இந்தியா பாகிஸ்தான் பேச்சுவார்த்தை மாதிரி ஒண்ணு ரெண்டு வார்த்தைகள்."என்ன, எப்படியிருக்கே" மாதிரி மணிரத்னம் பட டயலாக்ஸ்தான். அதுக்கே எஸ். . ராஜ்குமாரெல்லாம் வேலை வெட்டிய உட்டுட்டு இவன் மனசுலே வந்து லல்லல்லா வாசிச்சுட்டுப் போனாரு.நம்ப பசங்களுக்குத்தான் அது பொறுக்காதே. கடைசிலே, இவன் கதை விக்ரமன் பட உப்புமா மாதிரி ஆனது தான் மிச்சம் (அதாவது, ஒரு படத்திலே, தேவயானி ஒரு ஒலக மகா டிஷ் பண்ணுவாங்களே அது மாதிரி, உதிர்ந்து போச்சு). காரணம்லாம் பெரிசா ஒண்ணுமில்ல. இவன் இந்த பொண்ணுக்கிட்டே க்ளோஸா (அதே ஒண்ணு ரெண்டு வார்த்ததான் எங்க வில்லேஜ்லே க்ளோஸ்) பழகறது புடிக்காமே, ஒருத்தன் போய் இவன் க்ளாஸ் டீச்சர் கிட்டே போட்டு விட, அவங்களும், என்ன ஏதுன்னு விசாரிக்காம, அந்த பொண்ண கூப்பிட்டு திட்டி விட, அந்த பொண்ணு அழுதுக்கிட்டே, இவன திரும்பிப் பார்க்காம, போயிடிச்சு. அப்புறம் என்னா பண்றது. குமாரு, வராத தாடியெ சொறிஞ்சிக்கிட்டே, அடுத்த காதலுக்காக வெய்ட் பண்ண ஆரம்பிச்சிட்டான். அதுவும் வந்துச்சு. (தொடரும்)