Wednesday, August 6, 2014

டைம் பாஸ்

ரெண்டு வாரம் முன்னாடி கார்லே போகும்போது மீடியன்லே நின்னுக்கிட்டுருந்த ஒரு எருமை மாடு (நிஜமான எருமை மாடு) என் வண்டியொட டிரைவர் சைடுலே குதிச்சுடுச்சு. அதுக்கு என்ன கஷ்டமோ, இல்லே லவ் பெயிலியரோ. வண்டிக்கு நல்ல அடி. அத எடுத்துகிட்டு வொர்க் ஷாப் போனா, நான் பேசற தெலுங்கு அவனுங்களுக்கு புரியல. நான் "ஏக் buffallo படி போயிந்தின்னு" எனக்கு தெரிஞ்ச தெலுங்குல பானட்ட காட்டி பேசினேன். அதுக்கு அவனுங்க பானட்ட திறந்து பாத்துட்டு, "இக்கட லேது சார், போயிந்தி" ன்னு சொல்றானுங்க. அடபாவிங்களா, எருமை உள்ள இருக்குன்னா சொன்னேன். காருக்குள்ள எருமையை வச்சு ஓட்டற அளவுக்கு நான் என்ன அவ்ளோ பெரிய அப்பாடக்கரா.