Wednesday, January 1, 2014

பயணம்

முப்பத்தஞ்சு வருஷத்துல மொத தடவையா சென்னைலேர்ந்து காரைக்காலுக்கு ட்ரெய்ன்லே போனேன். என்ன ஒண்ணு. நாலரை மணி நேரத்துலே போக வேண்டிய இடத்துக்கு 9 மணி நேரம் போறானுங்க. வீட்டுக்கு சீக்கிரம் போக வேண்டிய அவசியம் இல்லேன்னா, சிதம்பரம், நாகப்பட்டினம்லாம்  ஒரே ரூட்ல பாக்கணும்னா நீங்க ஒரு டிக்கெட் எடுத்துட்டு போகலாம்.
இந்த தடவை கேரளா போனதுலே பையன் நல்லா என்ஜாய் பண்ணினான். மூணு நாய், வீடு ஃபுல்லா பறவைங்க. அவனுக்கு கொண்ட்டாட்டம் தான்.

வழக்கம் போல குல தெய்வம் கோயிலுக்கும், குருவாயூருக்கும் போகும் போது நமக்கு மினி வேன்லே பேக் சீட் தான். என்ன ஒண்ணு. நாங்க போன வண்டியிலே பேக் சீட்டே கிடையாது. வீட்டுக்கு திரும்பி வரும்போது முதுகு வலியோட தான் வந்தேன். பட்,  நல்ல தரிசனம் அது எல்லாத்தையும் மறக்க அடிச்சிடுச்சு.

எல்லா தடவயும் மூணு மாசத்துக்கு முன்னாலேயே டிக்கெட் புக் பண்றவன் இந்த தடவை மிஸ் பண்ணிட்டேன். எல்லாருக்கும் வெய்ட்டிங் லிஸ்ட். கழுத மூவே ஆகலே. அம்மாகிடேயும், அக்காகிட்டேயும் நல்லா பாட்டு வாங்கினேன்.

தமிழ் நாட்லெ டாஸ்மாக் மாதிரி கேரளாலே லாட்டரி. கும்பல் கும்பலா கத்து கத்தா வாங்கி சொரண்டறாங்க. மோஸ்ட்லி ஆட்டோ டிரைவருங்களும், பஸ் டிரைவருங்களும், கண்டக்டருங்களும், தின கூலிங்களும். வீட்டுக்கு பைசா குடுபாங்களேன்னே  தெரியல. எப்போதான் இதெல்லாம் ஒழிப்பானுங்களோ (பாவிங்க, என்னோட ஐநூறு ரூபாய்க்கும் ஒண்ணும் விழலே. இத கண்டிப்பா ஒழிச்சே ஆகணும்).

ஆச்சர்யம், ஆனால் உண்மை. சென்னை கிளைமேட் கேரளா கிளைமேட்ட விட பெட்டர்.

நிறைய  ஃபன்னி ஸ்டோரிஸ். சாம்பிளுக்கு ஒண்ணு. எனக்கு தெரிஞ்சவங்களோட தங்கச்சி ஹஸ்பெண்ட் இறந்துட்டாங்க (நல்லா வயசானவங்கதான்). அத ஒருத்தர் ஃபோன் பண்ணி இவங்களுக்கு சொன்னாங்க. இந்த கான்வர்சேஷன் இப்படி போச்சு.

"அம்மா இவரு இறந்துட்டாரு"
"ஐயோ அப்படியா. அந்த வீட்ட எனக்கு தரேன்னு சொன்னாரே. என்ன பண்ணாறோ தெரியலையே." திடீர்னு சுதாரிச்சிகிட்டு "நான் இங்க அழுதிட்டிருக்கேன்னு சொல்லிடு".

பையன் ரொம்ப சீக்கிரம் வளர்றான். இன்னைக்கு திடீர்னு "டாடி சில்கூர் பாலாஜி டான்ஸ் ஆடறா  மாதிரி கனவு கண்டேன்னு சொன்னான்." நானும் சரிடான்னேன். டாடி அது உண்மையிலே நடக்கும்னான். எப்படின்னு நான் கேட்டேன். " டாடி, நான் கீ போர்டு விழறா மாதிரி கனவு கண்டேன், அது அடுத்த நாள் உண்மைலேயே விழுந்தது, சோ, சில்கூர் பாலாஜியும் டான்ஸ் ஆடுவாரு".

happy new year all. have a blast.